பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் மூளைச்சாவடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
இயக்குநர் எஸ்பி ஜனநாதன் முதல் திரைப்பட முயற்சியிலேயே சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்று ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். எஸ்.பி ஜனநாதன் தமிழ் திரையுலகில் வெற்றி பயணத்தை தொடங்கி பிரபல இயக்குனராக வலம் வந்த அவர் இன்று சுயநினைவுடன் இல்லை.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து லாபம் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ள எஸ்பி ஜனநாதன் அதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 11ஆம் தேதி எடிட்டிங் பணிகளை மேற்பார்வையிட்டு சென்று வருவதாக உதவி இயக்குனரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவரிடமிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.
சந்தேகமடைந்த உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுயநினைவின்றி கிடந்த ஜெகநாதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் தனக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.