வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்குமா!

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வவ்வால்களை பாதிக்கும் கொரொனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த கொரொனா வைரஸால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்தியன் ஜேர்ணல் ஆஃ மெடிகல் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

 

கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காணப்படும் வௌவாலுக்கு பரவும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த வவ்வால் வைரசுக்கும் மனிதர்களை தாக்கும் வைரசுக்கும் தொடர்பில்லை என கூறப்பட்டுள்ளது. தற்போது பரவிவரும் covid-19 கொரொனாவை உருவாக்கும் வைரஸ்களில் இருந்து வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

இதன் காரணமாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதற்காக ஆய்வு நடத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த வகை கொரொனா கண்டறியப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஞ்ஞான் பிரசார் அமைப்பின் வெங்கடேஸ்வரன் மக்கள் வவ்வால்களை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியுள்ளார்.