25 பேருடன் பேருந்து போக்குவரத்து தொடக்கம்?

ஊரடங்கிற்கு பின்னர் போக்குவரத்து தொடங்கும்போது அதிகளவாக பேருந்தில் 25 பேரும், மெட்ரோ ரயிலில் 160 பேரும் செல்லலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கும் முடிந்த பின்னர் சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றை இயக்குவதற்கான நடைமுறைகளை நிர்வாகங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வருகின்றன.

 

தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்குவது என்றும் அவற்றிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 20 பேர் அமர்ந்தும் ஐந்து பேர் நின்றும் பயணிக்க செய்வது என்று மாநகர போக்குவரத்து கழகம் தீர்மானித்துள்ளது.

 

இதேபோல மெட்ரோ ரயிலில் ஒரு முறை நான்கு பெட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 160 பேரை ஏற்றிச் செல்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கைக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நடத்துநர்களுக்கும் அலுவலகர்களுக்கும் மிகவும் சிக்கலான பணியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.