மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டார் என்பது வெற்று நாடகம் எனக்கூறும் பாஜக..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த போது தான் தாக்கப்பட்டதாகவும் நான்கு பேர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள் என்றும் புகார் கூறியுள்ளார்.

 

மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்காக மம்தா அங்குள்ள மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மம்தா பானர்ஜியை அந்த மாநில ஆளுநர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இதனுடைய மம்தாவின் ஆதரவாளர்கள் அனைவரும் திரும்பிப் போ என கோஷங்களை எழுப்பினர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தமது பிரச்சாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு மம்தா கொல்கத்தா திரும்புகிறார். மம்தாவுக்கு காயம் என்பது வெற்று நாடகம் என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

 

அவர் கார் கண்ணாடியில் இடித்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து போலீசார் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு திரும்பிய தன்னை சிலர் தாக்கியதாக கூறிய மம்தா இந்த தாக்குதல் சம்பவம் நடந்த போது காவல்துறையினர் யாரும் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.