வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்தம் ..!

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

மத்திய அரசின் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி இரண்டு நாட்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

 

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும்போது சாமானிய மக்களின் முதலீட்டிற்கு ஆபத்து நேரலாம் என வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கூறி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

இதனால் எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கிகளில் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனிடைய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

 

அந்த கட்சியின் பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டுவதாக ஜனநாயக விரோதம் என குறிப்பிட்டுள்ளார்.