வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் மற்றொரு வைரஸ்..!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் முதலாவது மார்பர்க் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

எபோலா வைரஸ் நோய் தொடர்புடைய நோய் வந்தால் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை இருக்கும் என்பதுடன் இந்த வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவத் கூடியது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

 

ஏற்கனவே பல ஆபிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. ஆனால் முதன்முறையாக மேற்கு ஆப்பிரிக்காவில் அதன் தோற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட மனிதர்களுக்கிடையே உடல் திரவங்கள் அல்லது வைரஸ் படிந்த பொருட்கள் வாயிலாக பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.