வயிற்றுவலிக்கு மருந்தாக கற்களை சாப்பிடும் முதியவர்..!

காராஷ்டிராவை சேர்ந்த 28 வயதான முதியவர் கடந்த 32 ஆண்டுகளாக நொறுக்கு தீனியை போன்று கற்களை சாப்பிட்டு வருகிறார். சத்ரா மாவட்டத்திலுள்ள அதே கிராமத்தை சேர்ந்த ராம்தாஸ் தினமும் 250 கிராம் கற்களை சாப்பிடுகிறார்.

 

கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் ராமதாஸுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பல்வேறு சிகிச்சை எடுத்துக் கொண்டும் எந்த பலனும் கிடைக்காததால் அவர் கிராமத்தில் உள்ள மூதாட்டி ஒருவர் வயிறு வலிக்கு தீர்வாக கற்களை சாப்பிட கூறியுள்ளார்.

 

அதனை சாப்பிட்ட பின் வயிற்று வலி சரியானதால் அன்றிலிருந்து இன்றுவரை ராம்தாஸ் கற்களை தினமும் சாப்பிட்டு வருகிறார். கற்களை உண்ணும் பழக்கம் மனநல பிரச்சனையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.