நாட்டின் மிக வயது முதிர்ந்த மூதாட்டிக்கு பெங்களூருவில் கொரொனா தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுகாதார பணியாளர் மற்றும் களப்பணியாளர்கள் , 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயது மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கும் கொரொனா பெருந்தொற்று தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெங்களூருவில் வசிக்கும் காமெஷ்வரி 103 வயது மூதாட்டிக்கு பெருந்தொற்று தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.