புதுச்சேரியில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ்..!

புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அந்த மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளார்.

 

இருப்பினும் இந்த மாணவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் வழக்கம்போல் வகுப்புகள் இயங்கும் எனவும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் துணைநிலை ஆளுனர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக அரசு கல்வி வாரிய அறிவிப்பை பின்தொடர்ந்து10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.