அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் இவையெல்லாம் நிறைவேற்றப்படும்..!

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

 

தொகுதி பங்கீடு ,தேர்தல் பணி என பரபரப்பாக இயங்கும் நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,500
ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.