எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்

மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பியுள்ளனர். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனை சந்தித்த பின் இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

 

நிலைமை சீரடையாமல் விட்டால் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தெரிவித்தனர். அதுவரை கருப்பு பட்டை, ஹெல்மெட் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போவதாகவும், மருத்துவ சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.ஆனால் கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் நீடிக்கிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் இவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

இதனிடையே பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விடுத்த அழைப்பை மருத்துவர்கள் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் மம்தா நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என 6 நிபந்தனைகளை மருத்துவர்கள் சங்கம் விதித்து இருக்கிறது. அதுவரை. போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.