சேலத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்..!

சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

மூன்றாவது அலை தற்போது பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு கூடுதல் ஊரடங்கை அறிவித்தது. குறிப்பாக தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரே ஊரடங்கை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

அதன்படி சேலம் மாவட்டத்தில் கொரொனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் கார்மேகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

மாணவர்களைப் போல் செயல்படும் ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை மாலை 6 மணி வரை செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.