ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!

பெங்களூரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், எப்படி இருக்கீங்க, ஒன்னும் ஆகாது, கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததால் நேரில் வந்து பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

 

தைரியமாக இருங்கள் ஒன்றும் ஆகாது, ஆண்டவன் இருக்கிறான், உங்களுக்காக நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.