சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை – மா. சுப்பிரமணியன்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அமைச்சர் சுப்பிரமணியன் உரிய நடவடிக்கை மேற்கொண்டார். சென்னையை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வசதியில்லாத சிறுவனின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இருந்தால்தான் சிறுவனுக்கு சிகிச்சை இலவசமாக செய்யப்படும் என்று கூறுகின்றனர்.

 

ஆனால் சிறுவனிடம் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாத நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக அமைச்சர் மேற்படி சிகிச்சைக்கான உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

 

மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார்.