விபத்தில் உறுப்புகள் செயல் இழந்து 7 ஆண்டுகளாக நடக்க முடியாமல் தவிக்கும் இளைஞரின் குடும்பத்தினரை உதவிக்காக காத்திருக்கிறார். ஸ்டாலின் என்பவர் 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும்போது விபத்தில் சிக்கினார்.
படுகாயமடைந்த அவரது உயிரை மட்டுமே மருத்துவர்களால் காப்பாற்ற முடிந்தது. உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் இளைஞரின் மருத்துவ செலவுக்கு கூட வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.
குடும்பத்தினர் ஸ்டாலின் மருத்துவ செலவுகளுக்காக அவரது சகோதரர் படிப்பை பாதியிலேயே கைவிட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். இளைஞர்களுக்கான வழக்கை விரைந்து முடித்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மேலும் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.