ஒரு கை இல்லாவிட்டாலும் முடி திருத்தம் செய்து சாதிக்கும் பெண்..!

ரு கை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்க முடியும் என வியட்நாம் நாட்டில் வாழ்ந்து காட்டு வருகிறார் 42 வயது பெண்மணி ஒருவர். லேத்திகின்ராம் என்ற அந்த பெண்மணி ஒருவர் கோஷிமிண்ட் நகரில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

 

நான்காண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இடது கையை இழந்து விட்ட நிலையில் கணவர் விட்டு விட்டு சென்று விட இரு குழந்தைகள் மற்றும் வயதான தாயாரை கவனிக்கும் பொறுப்பு இவர் மீது விழுந்தது.

 

இதையடுத்து குடும்பத்தின் பூர்வீகத் தொழிலான முடிதிருத்தும் கடை நடத்திய அவர் ஒற்றைக் கையுடன் தன்னம்பிக்கை கொண்டு உழைத்து வருகிறார்.