சென்னை போரூரில் உள்ள இயக்குனர் டி ராஜேந்திரனின் தோட்டத்தில் இருந்த சுமார் ஏழு அடி நீளமுள்ள உடும்பை வனத்துறையினர் மீட்டனர். போரூரில் உள்ள டி ராஜேந்தரனுக்கு சொந்தமான தோட்டத்தை அவரது மனைவி சுத்தம் செய்துள்ளார்.
அப்பொழுது அங்கு பெரிய உடும்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஏழு அடி நீளமுள்ள உடும்பை மீட்டு கிண்டி வன அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.