கோவையில் மீண்டும் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது! மாநகர காவல்துறை அதிரடி!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கோவையில் 6 பேர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது.மாநகர காவல் துறை அதிரடி.

கோவையில் கொத்தனாரை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.அவர்களைகைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுகுணாபுரம் அறிவொளி நகர் விவேகானந்தர் சதுக்கம் பகுதியை சேர்ந்த கொத்தனார் அபுதாஹீர்.இவர் கடந்த ஏப்ரல் மாதம் பணி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது சுகுணாபுரம் கிழக்குப்பகுதியை சேர்ந்த அராத் நிஸார்,கோபி,முஜிபூர் ரகுமான்,பேபி (எ)ஆனந்த்,பாவா,ஹவாலா ஜலீல் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் முகமது உசேன் என்பவரது காரில்கடத்திச்சென்று சுகுணாபுரம் கிழக்கு ரெயின்போ காலனிக்கு தெற்கே உள்ள மலையடிவாரத்தில் வைத்து உருட்டுக்கட்டைகளால் தாக்கியதில் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து கொத்தனார் அபுதாஹீரின் சகோகரர் ஜாபர் சாதிக் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுகுணாபுரம் மற்றும் குனியமுத்தூரை சேர்ந்த நிஷாருதீன் (எ) அராத் நிஸார்,கோபிநாத் (எ) கோபி,முஜிபூர் ரகுமான்,பேபி ஆனந்த் (எ) ஆனந்த குமார்,பாவா,அப்துல் ஜலீல் (எ) ஹவாலா ஜலீல் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அராத் நிஷார்,முஜிபூர் ரகுமான்,அப்துல் ஜலீல் மீது கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு,வழிப்பறி,அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு பல வழக்குகள் இருப்பதாகவும்,இவர்கள் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.

அவர்களை கடந்த மே மாதம் 3 ஆம் தேதி கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

கோவை சிட்டி கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் படி குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் கணேஷ் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரின் மீதும் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.