அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலையில் அம்மாவின் மினி கிளினிக்கை திறந்து வைத்துப் பேசிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு 4ஆம் தேதியில் இருந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
5 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 பணத்தோடு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஒரு கிலோ, கரும்பு, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.







