டெல்லியில் மின்னல் தாக்கி உயிர்தப்பிய 4 பேர்..!

டெல்லியை அடுத்த குறுகிராமில் மின்னல் தாக்கிய4 பேர் அதிசயமாக உயிர் பிழைத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மரத்தடியில் மழைக்கு ஒதுங்கிய தோட்டக்கலை துறையை சேர்ந்த இந்த நான்கு பேரையும் மின்னல் தாக்கியதால் நான்கு பேரும் சுருண்டு விழும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 

ஆனால் நான்கு பேரும் உயிர் பிழைத்து விட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.