மின்சாரம் தாக்கி ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு..!

மிழகத்தில் மின்சாரம் தாக்கி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதுபோல் புதுச்சேரியில் ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்கார பேட்டையை சேர்ந்த குமார் என்பவர் தனது பேத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டின் முன்பாக உள்ள கம்பியில் துணியை காய வைத்துள்ளார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பியில் ஈரத்துணி பட்டதில் இருவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மகள் மகாலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதில் மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.