விழுப்புரத்தில் விசாரணைக்கு சென்ற பெண் போலீஸாரை மிரட்டும் தொனியில் பேசிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விக்ரவாண்டி தாலுகா மேல்பாதி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை என்பவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது.
தகராறில் மனைவிக்கு கணவர் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அப்போது விசாரணைக்கு சென்ற பெண் போலீஸாரை மிரட்டும் தோனியில் பேசிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.