விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் அடுத்த தவணை தொகையாக 19,500 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக 6000 ரூபாய் விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 1.38 லட்சம் கோடி நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான அடுத்த தவணை நிதியாக 19,500 கோடி ரூபாயை இன்று காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி அறிவிக்கிறார்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா இரண்டாயிரம் ரூபாய் என்று செலுத்தப்படுகிறது. இதன் மூலம் 9.75 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நேரடியாக பயனடைய உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.