ஆவடி அருகே திருமண ஆசை கூறி 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர் நத்தமேடு தெருவை சேர்ந்தவர் நரேந்திரன்.
ஆவடி அருகே திருமண ஆசை கூறி 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர் நத்தமேடு தெருவை சேர்ந்தவர் நரேந்திரன்.
இவன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நரேந்திரனுக்கும் ஆவடியை அடுத்த உள்ள சுதேசி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவருக்குமான நட்பு காதலாக மாறியுள்ளது.
நரேந்திரன் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை ஒன்று இருப்பதை சிறுமியிடம் மறைத்துள்ளார். மேலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளான். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர் நரேந்திரன் உடனான பழக்கத்தை சிறுமி வீட்டில் சொல்லவில்லை என்றாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாய் அவளின் வயிறு காட்டிக் கொடுத்துள்ளது.
இந்த செய்தி சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர வயிறு குறித்து விசாரித்துள்ளனர். முதலில் ஆட்டோகாரன் பற்றி சொல்ல மறுத்த சிறுமி ஒரு கட்டத்தில் அவருடனான காதலையும் அதனால் ஏற்பட்ட கருவையும் பற்றி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் நரேந்திரனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.