அரசு பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முட்டை வழங்க கோரிக்கை..!

திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மிதிவண்டி வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.பாலாஜி 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நிலையில் அனைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு உடன் முட்டை வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 


11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!

தினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் 28ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 


11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா..?

திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், கடற்கரை பூங்காக்கள் திறப்பு நேரம் அதிகரிப்பு ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான நெறிமுறைகளில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் செயல்படுவதற்காக புதிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

வரும் 12ம் தேதி காலை 6 மணி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கு தளர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அலகு தேர்வு..!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அலகு தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கொரொனா காரணமாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக அலகு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வருகிற மே 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி வரை வாட்ஸ்அப் மூலமாக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது.

 

அதில் மாணவர்களுக்குத் தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அந்த குழுவில் வினாத்தாள் விடைத்தாள் தவிர்த்து வேறு செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட கூடாது.

 

விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவு எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவிகள் விடைகளை எழுதி பெற்றோரிடம் கையொப்பம் பெற்று வீடியோ வடிவத்திற்கு மாற்றி ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.

 

ஆசியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் ஏற்படுத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 27ஆம் தேதி உயிரியல் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள், 29ஆம் தேதி தமிழ்மொழிப் பாட தேர்வு, ஜூன் 1ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜூன் 5ஆம் தேதி வேதியியல் தேர்வும், ஏழாம் தேதி மற்ற தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்..!

னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது. கொரொனாவுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக செய்முறை தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்றே செய்முறை தேர்வுகளுக்கு தேவைப்படும் கருவிகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுமா..?

கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்துவதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

மே மாதம் மூன்றாம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அட்டவணை வெளியிட்டு இருந்தது. தற்போது அந்த அட்டவணையில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெறுமா அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

 

காரணம் தமிழகத்தில் கொரொனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் கொரொனா பரவக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.

 

இதற்கு மத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடத்துவது சாத்தியமா? தொடர்ந்து திட்டமிட்டபடி அதே தேதியில் தேர்தலை நடத்தலாமா அல்லது சில காரணம்மாதங்கள் கழித்து தேர்வு நடத்தலாமா என்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் போடுமாறு ஓ‌பி‌எஸ்சிடம் கேட்ட மாணவர்கள்..!

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள் கூற முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

 

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீலையம்பட்டியில் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாஸ் போட்டு விடுங்கள் ஐயா எனக் கேட்டனர்.

 

அதற்கு தமிழக முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொடுக்குமாறு கேட்டதற்கு சொந்த செலவில் உருவாக்கப்படும் என அவர் பதிலளித்தார்.