12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : திருப்பூர் 3ஆவது இடம்
இடையில் 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன்பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தயாராக இருக்கின்றன.
தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக் கல்வித்துறை கோரிக்கை முன்வைத்துள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி திங்கள் அன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. அதற்கேற்ப பணிகளை முடுக்கி விட வேண்டியது மட்டும் தான் பள்ளிக் கல்வித்துறையின் பணி.இந்த சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு தரப்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.
இதையொட்டியே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவரது அனுமதி கிடைத்ததும் மே 6 அன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தமிழகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளை பொறுத்தவரை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சென்று பார்க்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். உயர்கல்விக்கான அடிப்படையாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் விளங்குவதால் மாணவ, மாணவிகள் பெரிதும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.