10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் முக்கிய கவனத்திற்கு..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்பான மழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

 


10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

மிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு திட்டமிட்டு மாணவர்கள் தயாராகும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது.

 

அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது.

 

11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடைகிறது. 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடைகிறது.

 

12 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகிறது. பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 5 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது.

 

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 5ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.


10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

2022 – 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான கல்வியாண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

 

மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

 


10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடக்க உள்ளதால் அதற்கான பணியில் பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது.

 

முக்கியமாக பொதுத் தேர்வின் போது பயன்படுத்தப்படும் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட தகவலுடன் பக்கத்தில் வைத்து தைக்கும் பணி நடந்து வருகிறது. விடைத்தாள் தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்த பிறகு தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 


10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

மிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அந்த அட்டவணையை அறிவித்தார்.

 

அப்போது பேசிய அவர் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடையும் எனவும், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்பதாம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி நிறைவடையும் என்றும் கூறிய அவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி நிறைவடையும் என குறிப்பிட்டார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 


10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அறிவுறுத்தல்..!

கொரொனா மூன்றாவது அலை அதிகரித்து வருவதால் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த ஒரு நபர் தொடுத்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார் .

 

ஆகவே அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.