10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

மிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு திட்டமிட்டு மாணவர்கள் தயாராகும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது.

 

அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது.

 

11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடைகிறது. 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடைகிறது.

 

12 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகிறது. பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 5 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது.

 

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 5ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.


10, 12-ஆம் வகுப்பு தேர்வு.. அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் உத்தரவு..!

10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி இருக்கிறார்.

 

அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பான அறிவிப்பை வழங்கி இருக்கிறார்.

 


10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

2022 – 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான கல்வியாண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

 

மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

 


இன்று வெளியாகிறது 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..!

மிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதேபோல 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

 

கொரொனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகள் காலதாமதமாக தொடங்கியதால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9:30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளையும், 12:00 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை அரசு அறிவித்துள்ள www.tn results.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடக்க உள்ளதால் அதற்கான பணியில் பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது.

 

முக்கியமாக பொதுத் தேர்வின் போது பயன்படுத்தப்படும் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட தகவலுடன் பக்கத்தில் வைத்து தைக்கும் பணி நடந்து வருகிறது. விடைத்தாள் தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்த பிறகு தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 


10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

மிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அந்த அட்டவணையை அறிவித்தார்.

 

அப்போது பேசிய அவர் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடையும் எனவும், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்பதாம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி நிறைவடையும் என்றும் கூறிய அவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி நிறைவடையும் என குறிப்பிட்டார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 


10,12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்..!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 10ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் நாளை முதல் 16ஆம் தேதி வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில திருப்புதல் தேர்வு நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

 

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் 10 ம் தேதி நடைபெறுவதாக ஆங்கில பாட திருப்புதல் தேர்வு 17 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் அதை மாணவர் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 


10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக உறுதியாக நடைபெறும்..!

த்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், எனவே பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக கட்டாயம் நடைபெறும் எனவும் அமைச்சர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 


9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனரின் பரிசோதனையில் தஞ்சை மற்றும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது என்றும் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளை சுற்றி மட்டுமல்லாமல் மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அதை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி மார்ச் 22ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

எனினும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு இணையவழி மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொது தேர்வு நடத்தவும் அவர்களுக்கு விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது என ராஜப்பன் பனிரெண்டாம் வகுப்பை தொடர்ந்து நடத்த அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.