தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் 100 கோடி ரூபாய் செலவில் ஆபாச வீடியோ..!

பாலியல் புகாரில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். நீர்வளத் துறை அமைச்சராக இருந்த ரமேஷ் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் ரீதியில் வன்முறைக்கு ஆளாக்கியது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பெண்ணுடன் தான் இருப்பது போன்று வெளியான ஆபாச வீடியோ 100% போலியானது என ரமேஷ் கூறியுள்ளார்.

 

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வீடியோ தயாரித்து வெளியிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.