ஜன.14 பொங்கல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு TN அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கார்டுதாரர்கள், செலவு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.






