புதுச்சேரியில் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
விபத்துக்குள்ளாகும் வாகனங்களை உரிய ஆவணங்களின்றி ஓட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.






