தபால் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட சிலந்தி..!

போலந்து நாட்டில் இருந்து தபால் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட உயிருள்ள சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தகவலின்பேரில் செயலகத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்திருந்த பார்சலை பிரித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

தர்மாகோலால் மூடி 107 சிறிய பிளாஸ்டிக் குப்பிகளும், ஒவ்வொரு குப்பியிலும் சிலந்தி ஒன்று இருப்பதையும் கண்டு பிடித்தனர்.

 

வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கோவா மற்றும் பிரஞ்சில் பாதுகாக்கப்பட்ட அரிய வகை சிலந்திகள் என்பதும் அவற்றை இறக்குமதி செய்வது சட்டவிரோதம் என்பதும் தெரிய வந்ததை அடுத்து அதிலுள்ள முகவரிக்கு திருப்பி அனுப்பி அதிகாரிகள் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.