இனி ATM-ல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்..!

டிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து, ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19-ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது.

 

மேலும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டினால் மே 1ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும்.அதாவது அதே வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கான கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.23ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

ஒருவர் அவருடைய சொந்த வங்கி ஏடிஎம்மில் மாதம் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.அதைப்போல, பிற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகரமாக இருந்தால் மாதம் 3 முறை கூடுதலாக இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

 

மெட்ரோ நகரமல்லாத பிற பகுதிகளாக இருந்தால் மாதம் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.பணம் எடுப்பது மட்டுமல்லாமல், இருப்பைச் சரிபார்ப்பது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்டவையும்கூட ஒரு பரிவர்த்தனையாகக் கணக்கில் கொள்ளப்படும்.

 

அந்த வகையில், பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, ரூ.1 அதிகரிக்கப்பட்டு, ரூ.6-ல் இருந்து ரூ.7-ஆக கட்டணம் உயரும் எனத் தெரிகிறது.