அரசு, தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம்..!

ரோடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

 

இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 6 தனியார் பேருந்துகளுக்கு ஆர் ஹாரன் தொடர்பாக தலா பத்தாயிரம் அபராதம் விதிக்க அபராதம் விதித்த அவர்கள் பேருந்துகளில் ஹாரன் மற்றும் முதலுதவி பெட்டி சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

 


அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவு..!

லங்கையில் இரண்டு நாட்களாக அரசுக்கு எதிராக வன்முறை நீடித்து வரும் நிலையில் சொத்துக்களை சேதப்படுத்துவோர்களை சுட்டு தள்ள முப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்பொழுது வன்முறையாக மாறியது. கடந்த ஒரு மாத காலமாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

இதன் எதிரொலியாக நாடு முழுவதும் வன்முறை பரப்பும் நிலையில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். ஆட்சியாளர்கள் மீதான பொதுமக்களின் கோபம் தீரவில்லை. மஹிந்தவின் பூர்வீக மாளிகைகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 30க்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

 


அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது..!

ரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்புகளில் தொடர்ந்து முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

 

இவற்றிற்கு www.tngasapg.இந்த எஸ்சி எஸ்டி பிரிவினர் 2 ரூபாய் கட்டணமும், இதர பிரிவினர் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நிரப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 20-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிப்பது சார்ந்த சந்தேகங்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். உதவி எண்கள் கல்லூரிகள் பாடப்பிரிவுகள் உள்ளிட்ட விவரங்களை www.tngasapg.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.