விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடங்கள்..! உலவும் விஷ பாம்புகள்..!

ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் படித்து வரும் சூழல் நிலவிவருகிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளி கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பள்ளி வளாகங்களில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

 

பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அந்த பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.