விமான பயணிகளுக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை..!

விமான பயணிகள் கொரோனா தடுப்பு வழி முறைகளைப் பின்பற்ற வில்லை என்றால் விமானத்திலிருந்து இறக்கி விடப்படுவார்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

பயணங்களின் போது சில விமான பயணிகள் முக கவசம், அணியாமலும் சமூக இடைவெளியை பொருட்படுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை அறிவுறுத்திய பிறகும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வில்லை என்றாலும் அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி விடுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விமானம் புறப்பட்ட பிறகு அலட்சியமாக இருக்கும் பயணிகள், அத்துமீறியவர்களாக கருதப்பட்டு அதன் பின்னர் விமான பயணிக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்படுவார்கள் எனவும் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.