விஜயகாந்த் நடிப்பதாக வெளியான தகவல் தவறு..!

தேமுதிகவில் செயல் தலைவர் ஏற்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுக்குழுவில் விஜயகாந்த் வெளியிடுவார் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

கிறிஸ்மஸ் திருநாளை ஒட்டி சென்னை புனித தோமையர் தேவாலயத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு நடத்தினார்.

 

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் விஜயகாந்த் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என கூறினார்.