வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கியவருக்கு வாழ்நாள் சிறை..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அம்ஸத் என்பவர் ஏற்கனவே மணமானவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 14 வயதில் மகள் உள்ளார். வளர்ப்பு மகள் என்றும் பாராமல் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.