வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அபர்ணா பாலமுரளி..!

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி தன்னைப் பற்றி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

 

அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

இதனால் நடிகர் நடிகைகள் பலரும் அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரிக்க தொடங்கினர். இந்த நிலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.