ரேஷன் கடைகளில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்..!

னவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு உப்பு மற்றும் மிளகு ஆகிய பொருட்கள் இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.