ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி..கண் மூடி திறப்பதற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

குமரி மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. முன்னாள் சென்ற காரின் மீது லாரி மோதிய நிலையில் அதில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பினர்.

 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 


ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்று நூலிழையில் உயிர்த்தப்பிய இளைஞர்..!

யில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே கிராசிங்கில் கடந்த 12ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

 

ரயில்வேகேட் மூடியிருந்த நிலையில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற சமயத்தில் அதிவேகத்தில் ராஜ்தானி விரைவு ரயில் வந்துள்ளது. இதனைக் கண்ட அவர் பதற்றத்தில் தனது வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.

 

அடுத்த வினாடியே தண்டவாளத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ரயில் மோதி சென்றது. இதில் இருசக்கர வாகனம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. குழந்தையின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என சமூக வலைதளங்களில் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.