முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரது பங்குதாரர்கள் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசு கட்டுமானப் பணிகளில் ஊழல் நடை பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.