முக கவசம் அணியும்படி கூறிய ஓட்டுனரை தாக்கிய பெண்..!

மெரிக்காவில் உபர் காரில் பயணித்த பெண் பயணிகள் ஓட்டுநரை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓட்டுனர் முக கவாசத்தை அணியுமாறு மூன்று பெண்களையும் அறிவுறுத்தியுள்ளார்.

 

அவர்கள் இருவரும் அணிந்த நிலையில் ஒருவர் தன்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். பெட்ரோல் பங்கில் காரை நிறுத்திய அவர் முககவசம் வாங்கும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் ஓட்டுநரின் செல்போனையும் பறித்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

 

தெற்காசியர் என்பதாலேயே தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வருத்தத்துடன் பதிவிட்ட வீடியோ வைரல் ஆனதையடுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.