மாணவர்கள் 16 பேருக்கு கொரொனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு கொரொனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் 5 பேருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொரொனா தொற்று உறுதியானது.

 

அவர்கள் அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகள் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பதினோரு மாணவிகளுக்கு கொரொனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

கொரொனா அதிகரித்து வருவதால் அந்த பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.