மத்திய பிரதேசத்தில் இரவுநேர முழுமுடக்கம் அமல்..!

மைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேச அரசு இரவு நேர முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. ஓமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

 

இந்த பொது உடனடியாக அமலுக்கும் வந்தது. மத்திய பிரதேசத்தில் இதுவரை யாருக்கும் ஓமிக்ரான் திடோற்று கண்டறியப்படவில்லை என்றாலும் தொற்று அதிகம் பாதித்த மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஓமிக்ரான் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

 

மகாராஷ்டிராவிலும் ஓமிக்ரான் பரவலை தடுக்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் கொண்டாட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே நாடகம் அவர்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ஆலோசனை நடத்தினார்.