மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவிலை சுற்றி வந்த 10 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

தூத்துக்குடியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவிலை சுற்றி வந்த 10 வயது சிறுமி மின்மாற்றி சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

 

கணேஷ் நகரை சேர்ந்த ரம்யா என்று அந்த சிறுமி ஆதிபராசக்தி நகர், விநாயகர் கோவிலில் பெற்றோருடன் சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நள்ளிரவில் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரகாரத்தின் ஓரமாக இருக்கும் மின்மாற்றியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிறுமியின் ஆடையை சிக்கியுள்ளது.

 

அதனை எடுக்க முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் கருகி உயிரிழந்துள்ளார். மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்ட நிலையில் அவர்கள் அதனை மறுத்துள்ளனர்.