பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை காவலர்..!

நாகப்பட்டினத்தில் பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பணியை முடித்துவிட்டு நேற்றிரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்றுள்ளார்.

 

அப்போது அங்கு குடியிருந்த நாகூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சிவக்குமார் பெண் காவலரை தடுத்து நிறுத்தி கன்னத்தை கடித்ததோடு அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.