பெண்ணை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற நபர்..!

சென்னையில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தியாகராயநகர் பேருந்து நிறுத்தம் அருகே துணிக்கடையில் வேலை பார்த்த பெண் ஒருவர் பணி முடிந்து வெளியே வந்துள்ளார்.

 

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து அவரது கழுத்தில் பிளேடால் அறுத்துள்ளார். அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் தாக்கிய நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் .

 

கழுத்தில் காயம் அடைந்தவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த இருவரும் காதலித்து வந்த நிலையில் சங்கரை விட்டு விலகியதால் கொலை முயற்சி நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.