பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு..!

ன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் திருமண தகவல் நிலையத்தில் பணியாற்றிய போது அதன் உரிமையாளர் ஜெபர்சன் என்பவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை நாகர்கோவிலில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து ஸ்டீபன் உள்ளிட்டோர் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

 

இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜெபர்சன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இந்த வழக்கு தொடர்பாக கிறிஸ்துவ இயக்க செயலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த மார்த்தாண்டம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னதாக அருமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் கைதான ஸ்டீபன் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.