பாலாற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு..!

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு படித்து வரும் சஞ்சய், பதினோராம் வகுப்பு படித்து வரும் மற்றொரு சஞ்சய் ஆகிய இருவரும் நேற்று மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர் சக மாணவர்களிடம் விசாரித்துள்ளனர்.

 

இருவரும் ஆற்றில் குளிக்க சென்றதாக அவர்கள் கூறியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ஆற்றங்கரையில் மாணவர்களின் ஆடைகள் இருந்துள்ளன. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடி அவரது உடலை மீட்டனர்.

 


பாலாற்றில் குளிக்கச் சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றம் பள்ளி அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று சென்னையை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அச்சிரப்பாக்கம் மலை மாதா தேவாலயத்திற்கு வந்தனர்.

 

ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய லியோன்சிங் ராஜா அவரது மகள் மற்றும் அண்ணன் மகன் லிவின்ஸ்டன் எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் படகு மூலம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தேடிவந்தனர்.

 

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு சடலங்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சிறுவன் லிவிங்ஸ்டன் சடலத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் திடீரென மேலே வந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர்.